Thursday, 24 January 2013

எல்லாப் புகழும் இறைவனுக்கே! - இருள்சேர் இருவினையும் சேரா!!


"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் 
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு." -  திருக்குறள்:1.5


ஐந்தாவது கடவுள் வாழ்த்துப்  பாடலாகத் திருக்குறளில் இடம்பெறும் மேற்கண்ட குறளுக்குத்  தவத்திரு குன்றக்குடி அடிகளார்   "இறைவனின் பொருளுடைய புகழினை விரும்பியவர்களை   மயக்கம் செய்யும்  நல்வினை,  தீவினை  வந்தடையா." என்றும் "இருள்சேர் - அறியாமை வழிப்பட்ட,  பொருள்சேர் புகழ் - பொருள்  நிறைந்த, அர்த்தமுள்ள  உண்மையான பயன் பொருந்திய புகழ்." என்றும் "இறைவனின் புகழினைச் சொல்லுதல் தன்முனைப்பை நீக்கும்; இறைவனைப்புகழ்தலால் யாரும் இகழப்படுவதில்லை. ஆதலால், அழுக்காறில்லை. எனவே, வினைபடு வாயில்கள் தோன்றா." என்றும் அவரெழுதிய திருக்குறள் உரை நூலில் விளக்கம் தந்துள்ளார்கள் .  திருக்குறள் முனுசாமி  உள்ளிட்ட பெரும்பான்மையான திருக்குறள் உரையாசிரியர்கள், அடிகளாருடைய கருத்தினை ஒட்டியே விளக்கியுள்ளனர்.  ஆயினும், சைவ சித்தாந்தத்தின் வழி சிந்தித்தால், வள்ளுவனின் கவியுள்ளம், உண்மை விளக்கம் வெளிப்பட்டுத் தோன்றுகிறது.

"இறைவன்  பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு இருள்சேர் இருவினையும் சேரா." என்று கொண்டு கூட்டினால், "இறைவன் பொருள்சேர் செயல்புரிந்தாரிடம்  இருள்சேர் இருவினையும் சேரா."  எனத் தெளியும். அதாவது, 'இறைவன்  பொருள்சேர் புகழ்புரிவது' என்பது ஒருவர் செய்யும் செயலெல்லாம் இறைவன்(சிவன்) செயலே எனச்  சிவபுண்ணியங்களாகச்  செயல்புரிவதாகும்; அவ்வாறு செயல்புரிந்தாரிடம்    'இருவினைஒப்பு' எனப்படும் நல்வினையின் பயனாகிய இன்பத்தினிடம் விருப்பு அல்லது தீவினையின் பயனாகிய துன்பத்திடம் வெறுப்பு போன்ற எண்ணங்கள் எதுவும் இன்றி 'நம் மூலமாக இறைவன் இயங்குகிறான்'  என்ற உணர்வு ஒன்றே நிகழ்வதால், 'இருள்சேர் இருவினையும்' சேராமல் நீங்கும் என விளங்கும். 'நான்' செய்வது என்ற உணர்வுடன் செய்யும் நல்வினை கூட, அச்செயல்புரிந்த உயிரின் புண்ணியக் கணக்கிலே சேர்ந்து நற்பயனை, அப்பிறப்பிலோ பிற்பிறப்பிலோ தரும். (நல்வினையும் அதன் பயனை அனுபவிக்குமாறு பிறவியைத் தருவதால்) இது 'தன் நிமித்தம் செயல்புரிவது' என்ற வகையில் வரும்.  வள்ளுவப் பெருந்தகையும்

'யான்என தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்"


என அருளியுள்ளார்கள். நல்வினையே உயிர்ப் புண்ணியக்  கணக்கில் சேர்ந்து பிறவிப்பிணியைத் தரும்போது போது தீவினை குறித்துச் சொல்ல  வேண்டியதேயில்லை.  எனவே,  மணிவாசகரின்  வாக்கான 

"நன்றே செய்வாய் பிழை செய்வாய்  
  நானோ இதற்கு நாயகமே" - திருவாசகம் 

என்ற திருவாசகத்தின் வழி 'செய்யும் செயலெல்லாம் இறைவன்(சிவன்) செயலே' என்று பணி புரிவதே 'இறைவன்  பொருள்சேர் புகழ்புரிவது' ஆகும்.  அத்தகைய உயிர்களுக்கு மட்டுமே 'இருள்சேர் இருவினையும் சேரா' நிகழும்எனவே, 'இறைவன்  பொருள்சேர் புகழ்புரிந்தார்' என்பதை 'இறைவனின் பொருளுடைய புகழினை விரும்பியவர்களை' என்று நேர் பொருள் கொள்ளுதல் அத்துணைச் சிறப்பன்று. ஆஸ்கார் விருதினைப் பெற்ற தருணத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் அவர்கள் 'எல்லாப்  புகழும்  இறைவனுக்கே!' என்று அவருக்குக் கிடைத்த வெற்றியை அவர் செயலாகக் கருதாது 'இறைவன்  பொருள்சேர் புகழ் புரிந்தது' குறித்து உலகொர்க்கேல்லாம் உணர்த்தியதை இங்கு நினைவு கொள்ளத் தக்கது. அங்ஙனமல்லாது தம் செயலாகச் செய்யும் நல்வினை, தீவினை இரண்டும் அவ்வவ் உயிரின் 'வினைக்குவியல்' என்னும் 'சஞ்சித கர்மத்தையே' சேரும்.

இனி, 'இருள்சேர் இருவினையும்' என்று நல்வினை, தீவினை ஆகிய இரண்டையும் சேர்த்துக் கூறியது ஏன் என்று சிந்திக்கலாம். தீவினையை இருள் என்றது பொருத்தமே. நல்வினை எப்படி இருள் வகையில் சேரும்? நல்வினை, தீவினை ஆகிய இரண்டிற்கும் தாய் ஆணவமாகிய இருளே. ஏனெனில், உயிரின்மேல் படிந்துள்ள ஆணவ இருளைப் போக்கவே பிறப்பு இறைவனால் நிகழ்த்தப்பெறுகிறது; பிறப்பினால் கிட்டிய உடல்மூலம் உயிர் செயல்பட்டுக் காரியங்களைச் செய்யும்போதுதான் நல்வினை, தீவினை ஆகியன 'ஏறுவினை'களாக (ஆகாமிய கர்மமாக) நிகழ்ந்து பின்  உயிரின் 'சஞ்சித கர்மம்' அல்லது 'வினைக்குவிய'லில் சென்று சேருகின்றன. எனவேதான், 'இருள்சேர் இருவினையும்' என்றார் வள்ளுவர். 

உயிரின்மேல் படிந்துள்ள ஆணவமாகிய இருளால், உயிரின் இயல்பாகிய அறிவு மறைக்கப்பட்டு, தான் யார் என்று உணராது உயிர் கேவலநிலையில் கிடக்கும்.  அறியாமை இருளாகிய ஆணவத்தால் கலக்குண்டு உழலும் உயிர்கள் அவைகளின் இயல்பாகிய அறிவு விளக்கம் பெற்று வீடுபேறு எய்திடவே, சடசக்தியாகிய மாயையினின்று உலகத்தையும்,  ஐம்பொறிகளுடன் ஐம்புலன்களும் கூடிய உடல்களை   அறிவைத்தரப்   படைத்து,  இன்ன உடலில் இன்ன உயிர் என, உயிர்களின் வினைகளுக்கு ஏற்ப (கன்மம்/கர்மம்) அமைத்துத் தருகிறான் இறைவன். இவ்வாறு மாயைக்கு  அருளேயாகிய இறைவனிடத்தும் (உயிர்களைப் பற்றியுள்ள) இருளாகிய ஆணவத்திடமும் தொடர்பு உள்ளதால், செயல் அல்லது வினை எனப்படும் கன்மத்தின் விதையான 'ஆசை'யை முளைவிடச்செய்து இருவினைகளை வளரச்செய்கிறது. அருளின் தொடர்பால் நல்வினையும், ஆணவ இருளின் தொடர்பால் தீவினையும் விளைகின்றன. இது, உயிர்கள் ஆற்றிய நற்தொண்டுகளாலும், புலன்கள் நுகர்ச்சி  தரும் மயக்கத்தால் நிலையில்லாத இப்பிறவிகளை நிலையென எண்ணித் தவறான வழிகளில் பொருளீட்டும் முனைப்பில் செய்யும் தீமைகளாலும் அறியப்படும்.  நல்வினையால் நற்பயனும், தீவினையால் துன்பமும், விளைவுகளாக உயிர்களால் பல பிறவிகளில் நுகரப்படும் (அனுபவிக்கப்படும்). பிறவி நீங்கி முத்திபெற இந்த நல்வினையும் ஒரு காலத்தில் விடப்பட வேண்டியதாதலின், இதுவும் இருளாகிய தாய்வழிச் சொத்தாயிற்று.  ஒரு பிறவியில் நுகரவேண்டிய நல்வினை, தீவினை பயன்களான புண்ணிய, பாவங்கள் 'ஊழ்வினை' / 'பிராப்தம்' / 'பிராரர்த்த கர்மம்' ஆகும். அவ்வாறு ஊழ்வினையை நுகர ஏற்பட்ட பிறவியில் உயிர் ஆற்றும் செயல்கள் (அல்லது)  வினைகள் 'ஏறுவினை' / 'வருவினை' / 'ஆகாமிய கர்மம்'  ஆகும். 'ஊழ்வினை'யின் குழந்தையே 'ஏறுவினை'. இது சென்று சேருமிடம் உயிரின் 'வினைக்குவியல்' எனப்படும் 'சஞ்சித கர்மம்'. ஊழ்வினையை நுகர ஏற்பட்ட பிறவியில் வினைத் துறவறம் பூண்டு, 'இறைவன் பொருள்சேர் புகழ்', அதாவது நமது எல்லாச் செயல்களையும்  'இறைவினையாக'வே நாம்  செயல்  புரிவோமானால் 'இருள்சேர் இருவினை' நம்மை அண்டாது.
  
உயிர்கள் உலகத்தில் பிறந்து இறந்து வரும்பிறவிகளில்  ஈட்டும் வினைகளின் மொத்த தொகுப்பே 'சஞ்சித கர்மம்' அல்லது 'வினைக்குவியல்' ஆகும். 'முக்தி' என்னும் பேரொளி கிட்டும்வரை, ஆணவ இருளில் உழலும் உயிர்களுக்கு  அறிவு விளக்கம் பெறும்வண்ணம், பேரருளாளனாகிய இறைவனால் அருளப்பட்ட கைவிளக்குகளே உடல்களும் உலகமும். இதுகாறும் இப்புவனத்தில் தோன்றிய இறைவனின்  அடியார்களாகிய, மாணிக்கவாசகர் போன்ற  அருளாளர்களால் அருளப்பட்ட மறைகளே மின்விளக்குகள் போல் நின்று 'முற்றறிவு' என்னும் முத்தியை நோக்கிய உயிர்களின் பயணத்தில் துணைபுரிகின்றன. பயண முடிவில், இறைவனின் பேரருள் வெளித்தோன்றி மரணமில்லாப் பெருவாழ்வாகிய 'முக்தி' எனும் இறைப்பேறு (சிவப்பேறு) கிட்டுமாறு அருளும். இவ்ஞான ஒளி வெளிப்படுங்காலை கைவிளக்கும்,மின்விளக்கும் தேவையில்லாமல் போகும். இதையே மணிவாசகர்

"உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன் 
கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனி அமையும்"
                                                                - திருவாசகம்:திருப்புலம்பல்-3

என இனிது அருளிச்செய்கிறார். உயிருக்கு உற்றார்-உடல், ஊர்-உலகம், பேர்- மன,மொழி,மெய்களால் உயிர் நிகழ்த்தும் இருவினைகள், கற்றார்-மறைகள். இவையனைத்தும், கைவிளக்கும் மின்விளக்கும் சூரியன் வெளிப்படுங்காலை தேவையற்றுப் போவதைப்போல், இறையருள்  உயிர்க்கு வெளித்தோன்றி முற்றறிவை அறிவிக்கும்போது தேவையற்றுப் போகும். சீவன் ஆகிய உயிர் சிவனுடன் இரண்டறக்கலந்து (கலப்பினால் ஒன்றாதல்-அத்துவிதக் கலப்பு) சிவமே ஆகும்போது வழிபாடு உள்ளிட்ட அனைத்துச் செயல்களும் மறைந்து விடும். இதை மணிவாசகர்

"மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்ப்படும் ஆயிடிலே
கண்கள் இரண்டும் அவன் கழல் கண்டு களிப்பன ஆகாதே 
காரிகையார்கள் தம் வாழ்வில் என்வாழ்வு கடைப்படும் ஆகாதே 
மண்களில் வந்து பிறந்திடுமாறு மறந்திடும் ஆகாதே 
மால்  அறியா மலர்ப்பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே 
பண் களி கூர் தரு பாடலொடு ஆடல் பயின்றிடும் ஆகாதே 
பாண்டி நல் நாடுடையான் படையாட்சிகள் பாடுதும் ஆகாதே 
விண் களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படும் ஆகாதே"
                                                                       - திருவாசகம்:திருப்படையாட்சி-1

என, தூய மனம் படைத்திருக்கிறபொழுது பக்தனுக்குத் தன் ஊனக் கண்களால் இறைவனைக் காண இயல்வதையும், முக்திக்கலப்பிலே உடல்,மனம்,மாயப் பிரபஞ்சம், உயிர் இருப்பு அனைத்தும் மறைவதால், கண்கள் உள்ளிட்ட அனைத்து நுகர் பொறிகளும் செயலற்றுப் போய் கண்கள் இறைவன் திருவடிகளைக்  கண்டு களிப்பது உள்ளிட்ட அனைத்து வழிபாடுகளும் நிகழாமல் உயிர் சிவமேயாகிவிடும் என்பதை அற்புதமாக அருளிச் செய்கிறார். 'நான்' என்ற தன்னுணர்வு இருந்தால் மட்டுமே இறைவனைக் காண்பதும், களிப்பதும் நிகழ இயலும். இரண்டறக் கலந்துவிட்ட முக்திக் கலப்பில் தன்னுணர்வு கரைந்துவிடுவதால் இவை நிகழாது என்கிறார் பெருமான்.

நம் அறிவு எனப்படும் சிற்றறிவு ஐம்புலன்களுடனுடைய உடலினின்றும் அதன்வழி உலகத்தினின்றும் பெறப்பட்டவையே. புலன்களில்  ஏதேனும் குறையிருப்பின், அப்புலன்வழிக்கிட்டும் அறிவு தடைபடுகிறது. கேட்கும் புலனில் குறைவுண்டாகின், கேள்விச் செல்வத்தால் கிட்டும் அறிவு கிட்டாது. பிறவிகளிலேயே உயர்ந்த பிறவி மனிதப்பிறவி. இதுபற்றியே அருள் ஞானியார் ஔவையார்  அருளிச்செய்த 

"அரிது அரிது மானிடராதல் அரிது.
மானிடராய்ப் பிறப்பினும் கூன், குருடு, 
செவிடு, பேடு நீங்கிப் பிறத்தல் அரிது. 
பேடு நீங்கிப் பிறந்த காலையும் 
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது.
ஞானமும் கல்வியும் நயந்த காலையும் 
தானமும் தவமும் தான் இயற்றல் அரிது.
 தானமும் தவமும் தான் இயற்றியகாலை 
வானவர் நாடு வழி திறந்திடுமே.

முத்தி உபாயச் செய்யுள் இங்கு உணர்ந்துகொள்ளத் தக்கது.  இச்செய்யுளில், "ஞானமும் கல்வியும் நயத்தல்" என ஞானத்தை முதலிலும் கல்வியைப் பின்னும் எழுதியது சிந்தனைக்குரியது. கல்வி பெறுவதல்லவா ஞானம் பெறுவதன் முதற்படி? தற்கால உலகத்தில் கல்வி என்பது பொருளீட்டுவதற்கானப் பயன்பாட்டுக் கல்வி என்ற அளவிலே நின்றுவிட்டமையைக் கண்கூடாகக் காண்கிறோம். பொருளீட்டுவதற்கானப் பயன்பாட்டுக் கல்வியில் 'முனைவர்' பட்டம் பெற்ற ஒருவர் தவறிழைத்தால் 'படித்தவன் செய்கிற காரியமா' என நொந்துகொள்கிறோம்; ஏனெனில், கல்வியில் ஞானம் உள்ளீடாக இருக்கவேண்டும் என்பது மானுட எதிபார்ப்பு. ஞானமில்லாத எந்தக் கல்வியும் பயனற்றது. ஞானமற்ற பொருளீட்டுப் பயன்பாட்டுக் கல்வியினால் உலகின் பெரும் செல்வந்தராக வாழ்ந்த ஆல்ப்ரெட் நோபெல் அவர்களின் வாழ்க்கை இங்கு நினைவுகூரத் தக்கது. டைனமைட் உள்ளிட்ட பல வெடிமருந்துகளைக் கண்டுபிடித்து, அவைகளின் விற்பனை மூலம் உலகின் முதல்நிலை பணக்காரரான அல்ப்ரெட் நோபெலின் மரணச் செய்தியை 1888ம் ஆண்டு அவரே படிக்க நேர்ந்தது. அல்ப்ரெட் நோபெலின் சகோதரர் லுத்விக் இறந்த செய்தியைத் தவறாக ஆல்ப்ரெட் நோபெல் இறந்துவிட்டதாக ஒரு பிரஞ்சு நாளிதழ் வெளியிட்டது.  "மரண வியாபாரியான ஆல்ப்ரெட் நோபெல் மரணம்" ("The merchant of death is dead") என்று செய்தித் தலைப்பிட்டு "உலகம் இதுவரையில் கண்டிராத வகையில் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொல்வதற்கான டைனமைட் உள்ளிட்ட ஆயுதங்களைக் கண்டுபிடித்து, பிணக்குவியல்மேல் பணக்குவியல் ஈட்டிய வல்லரக்கன் ஆல்ப்ரெட் நோபெல் மரணமடைந்தான். அவன் மரணம் கொண்டாடப் படவேண்டியது." என எழுதியது. கலிங்கத்துப் போர் அசோகச் சக்கரவர்த்தியின்  மனமாற்றத்துக்குக் காரணமானதைப்போல் இச்செய்தி ஆல்ப்ரெட் நோபெல் மனத்தை வருத்தியது. சரித்திரம் தன்னை மன்னிக்குவிதமாக அவர் ஈட்டிய அனைத்துப் பணத்தையும் நோபெல் அறக்கட்டளைக்கு அளித்தார். அந்தச் செயல் மூலம், மனிதகுலம் 'நோபெல் பரிசை நிருவியவர் அல்பிரட் நோபெல்' என்னும் நினைவையே கொள்ளும் வண்ணம் 'நோபெல் பரிசு' என்பதை உலகோர் இதயங்களில் ஆழப்பதித்தார். இன்றுள்ள பெரும்பான்மையோர் 'டைனமைட்டைக் கண்டுபிடித்தவர் அல்பிரட் நோபெல்' என்பதை அனேகமாக மறந்துவிட்டனர் என்றுதான் கூறவேண்டும். மனிதகுல மேம்பாட்டிற்கு உழைத்த அறிவியல், பொருளாதாரம், மானுடம், கலை, உலக அமைதி போன்ற துறைகளின் பங்களிப்பாளர்களுக்கு நோபெல் பரிசு வழங்கப்படுகிறது என்பதே பெரும்பான்மையரின்  நினைவு. இவ்வாறு, 'அல்பிரட் நோபெல்' தன் வாழ்நாளில் ஈட்டிய பெரும் தீவினைக்குப் பரிகாரம் கண்டார். ஆயினும், மனிதகுலம் இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டதா என்பதுதான் வினா. வினைப்பயன் என்பதே விடை.





Thursday, 17 January 2013

Saiva Siddhantam in a Nutshell

Saiva Siddhantam in a Nutshell

Saiva Siddhantam is an elaborate and complete system of philosophy on True Knowledge. The Siddhantam, a pluralistic realism, maintains that God, souls and matter, or Pati, pasu and pasam or 3-malas, constitute reality and eternal. The events in the world, and the changes that overtake the soul are due to the two facts of the impure state of the soul ( 3-malas make the soul impure), and God's concern for soul, which arises from His nature to love. The soul is covered by the 3-malas, anavam, kanmam and mayai. Anavam (called moola malam or root cause), an impurity, produces ignorance, detracts the soul from its true nature of a spiritual being. The remedy for it lies in true knowledge or Gnanam. Such Gnanam as is required to overcome anavam is possible for the soul as it has the faculties of knowing, feeling and acting; In other words it has the Gnana, iccha and kriya saktis, which are the cognitive, emotive and conative abilities respectively. These  can be made to function and to develop by the power or sakti or grace of God, which expresses itself as Gnana sakti or omniscience, iccha sakti or love for the soul, and kriya sakti or power to act. The actions required to redeem the soul are carried out by the kriya sakti of God, which again takes different forms in fulfilling the five functions of God. The Padaithal sakthi (Brahma) creates the world ; the Kaththal sakthi (Vishnu) preserves the world ; the Odukkum sakthi (Rudhra)destroys the world; the Maraithal sakthi (tirobhava or tirothana) conceals from the soul the true nature of the world so that the soul is attracted by it and yields to its temptations; and the Arul sakti (Anugraha) reveals to the soul the true nature of the world, so that the soul withdraws from the world, and turns to God.
These activities are necessary to bring into play the faculties of the soul, which thereby attain their highest development. Such development is necessary for the soul to rise from its impure to its pure state. Its knowing power or Gnana sakti enables it to attain, in successive stages, knowledge of the world (pasa-Gnana), knowledge of the soul (pasu-Gnana), and finally, knowledge of God (Pati-Gnana). These steps constitute Gnana marga or the path of knowledge, which the Siddhanta upholds as the highest path to salvation. The desiring power of the soul enables it to desire firstly, the things of this world, and finally, God, the Great Spirit. Its power to act enables it to pursue the things of the world in its earliest stage. In doing so, it performs good and bad deeds or karma (vinai). The laws of karma requires that good deeds(nalvinai) should be rewarded, and bad ones(theevinai), penalised. The reward and punishment that accrue to the soul (Sanchitha karma or PazhaVinai) are to be reaped in various lives and through different embodiments (Prarartha karma or OozhVinai). This passing from life to life in different bodies constitutes transmigration or samsara. In this long journey, the soul learns through experience that bad deeds bring about its ruin, and good ones, its redemption. This discipline transforms the soul so that from pursuing the world, it now seeks God. When the soul surrenders itself completely to God, and when its ego leaves and is filled with Siva, its acts are not its acts, but those of Siva, then it incurs no more karma. Here, ends transmigration of soul; and the soul becomes a saved being or a jivanmukta.
In emerging from its impure to its pure state, it goes through different stages called avasthas. In the kevala avastha, thesoul lies forlorn, covered by anava, and with karma over-shadowing it. In the sakala avastha, it takes on a body, enters the world where it meets objects made out of maya or matter, and begins its active career. In the suddha avastha, it becomes a redeemed soul, a jivanmukta at first, and then, when it sheds its body, a released Soul, enjoying the bliss of fellowship with Siva. This is paramukthi.

Tuesday, 15 January 2013

Fundamentals of Saiva Siddhantham

Introduction (தோற்றுவாய்)

 

The amazing advancements in the fields of science,engineering, technology and medicine, though mostly limited to men and materials of this earth  in the twenty first century, has led to the fear of mankind slipping into the world of materials, leaving behind its glorious legacy of its understanding the unbounded universe, ultimate truth and The Almighty who's Laws of Rule prevail the unbounded universe. The advent of internet and connectivity have proved such fears are found to be untrue with floods of blogs of Philosophies on Divine matters and literature appear on the net. However, the validation of such matters are at best left the wisdom of the netizens browsing such matters. A lot of blogs are being posted on 'Saiva Sidhanta' philosophy hosting different versions of saiva siddhanta. This blog has a special purpose of enlightening the readers who do not have knowledge in Tamil (and those readers who could not go through the vast saiva siddhantham literature in Tamil) and on the 'Saiva Siddhantham' philosophy as enshrined by the GnanaGuru of the world, the First Acharyaa of the four Santhana Acharyaas, 'Meikanda Deva Nayanar' or 'Meikandaar' (In fact, Saiva Siddhantham holds 'The Almighty, Lord Siva' himself as the First Acharyaa of the Prapancha; we shall see the details at a later section on the Acharyaas of Saiva Siddhantha). This blog has no intention in establishing any kind of siddhntha supremacy but is written with the humble note of Thayumanavar swamigal:

"வேருபடுஞ் சமயமெல்லாம் புகுந்து பார்க்கின்
விளங்குபரம் பொருளேநின் விளையாட் டல்லால்
மறுபடுங் கருத்தில்லை முடிவில் மோன
வாரிதியின் நதித்திரள்போல் வயங்கிற் றம்மா." - தாயுமானவர்.

Further, it is worth noting the Gospel of Sivagnana Siththiyaar, one of the 14 meikanda sastra which  says


"யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி யாங்கே
மாதொரு பாக னார்தாம் வருவர் . . . " - சிவஞான சித்தியார்.

Why Saiva Siddhantham (சைவ சித்தாந்தம்) is a True Science?

 

Saiva Siddhantham means "Clear and Final Conclusion on Truth" ("உண்மையின் முடிந்த முடிபு" in Tamil). The Definition of Science, according to Webster's New Collegiate Dictionary,  is "knowledge attained through study or practice," or "knowledge covering general truths of the operation of general laws, especially as obtained and tested through scientific method [and] concerned with the physical world."

What does that really mean? Science refers to a system of acquiring knowledge, using observation and experimentation to describe and explain natural phenomena. The term science also refers to the organized body of knowledge people have gained using that system. Less formally, the word science often describes any systematic field of study or the knowledge gained from it. Science, by and large, confines itself to the study of men, materials and nature belongs to the Earth and a little on the outer planets and cosmos. It accepts the existence of soul, of course grudgingly, since it has to define death of living beings; science does not want to tread further from that point. Hence, learned people called the knowledge enlightened by science as 'knowledge limited by Science' or 'சிற்றறிவு'.

Saiva Siddhantham (Divine Science) is also "knowledge attained through study, practice and assimilation of 'Ultimate Knowledge (or Ultimate Truth)' or 'முற்றறிவு' covering general truths of the operation of divine laws, especially as obtained and tested through scientific methods and concerned with the entire Universe or Prapanja, Souls and 'The God'.

What does that really mean? Saiva Siddhantham (Divine Science) refers to a system of acquiring 'Ultimate Truth' or 'முற்றறிவு', using observation, experimentation and validation to describe and explain natural and divine phenomena using a set of axioms and aphorisms using the well established "Theory of Measure" ("அளவையியல்" in Tamil). The formal philosophical measures of Logic, Rationalism and Inference are methodically used to establish the existence of God, infinite Souls and Malas or Bondages binding those souls. Rationalism is the primary mean used in its well presented and convincing aphorisms(doctrines) and teachings. Every axiom in Saiva sidhantham is well explained, nothing in it is taken for granted. No Axiom or premise has ever been asserted arrogantly. Philosophical research and questioning is encouraged for any earnest and inquiring learner and no attempt is made anywhere to muffle such learners in the name of God or faith. Explanations for the axioms and aphorisms are neatly provided by the application of strict logical methods derived from the keen observations of daily occurrences in life; it also clearly distinguishes how the premises differ with such known worldly examples in order to avoid confusion. No one can find any irrational component in this enlightening philosophy. 


"சுவைஒளி ஊறோசை நாற்றம்என் றைந்தின் 
வகைதெரிவான் கட்கே உலகு"   - திருக்குறள்:3-7
"Taste, light, touch, sound, and smell: who knows the way
Of all the five,- the world submissive owns his sway." - Thirukural:3-7

(The world is within the knowledge of him who knows the properties of taste, sight, touch, hearing and smell)

is the Thiruvalluvar's assertion for the need of research in Philosophy. (The Soul, which is pure consciousness, imagines itself to be finite and confined to the body and of with limited knowledge and power due to its bondages called trimalas. It is ignorant of its nature as consciousness and also mistakes the body for its reality.  The five senses (ஐம்புலன்கள் -பார்த்தல், கேட்டல், உணர்தல், நுகர்தல், சுவைத்தல்) are the windows of experience for the soul while the five sensors (ஐம்பொறிகள் - கண், செவி, மெய், நாசி, நாக்கு) are the sensing devices for the five senses.  The field of experience (to the soul-உயிர்) happens to be the world as panjaboothas and the senses these panjaboothaas (நெருப்பு(எ)ஒளி, காற்று, நிலம், நீர், ஆகாயம்). If the soul allows itself to be dragged along the course of these senses, nothing good will come the soul either in this worldy life or beyond. On the contrary, if the soul understands and realises the functioning of the panjaboothaas and the five senses and uses them with consciousness, the soul learns to lead the life without adding any additional load to the sanchitha karma (வினைத்தொகுப்பு) during this birth and moves closer to Salvation (சிவப்பேறு, முத்தி), and fulfils the purpose of the life. (சுவை,ஒளி, ஊறு, ஓசை நாற்றம் என்ற ஐந்தின் வகைதெரிந்த உயிர் இப்பிறப்பான ஊழ்வினையைச் செவ்வனே நிகழ்த்தி, புதிய வினைகளேதும் ஈட்டாது, சிவப்பேறு பெறத்  தகுதிபெறும். புதிய வினைகள் ஈட்டப்படாததாலும், ஊழ்வினை நுகரப்பட்டுவிட்டதாலும், வினைத்தொகுப்பின் சுமை குறையும்; இப்பிறப்பிலேயே ஈசன் அருளை முனைந்து பெறின் வினைத்தொகுப்பின் தொடர்பறுந்து முத்தியும் சித்திக்கும்.))

  Thirukkalitrupadiyaar (திருக்களிற்றுப்படியார்), one of the fourteen saiva siddhnatha vedas also encourages research in Philosophy as follows:

"தூல உடம்பாய முப்பத்தோர் தத்துவமும்
மூல உடம்பாய முதல்நான்கும் - மேலைச்
சிவமாம் பரிசினையும் தேர்ந்துணர்ந்தார் சேர்ந்த
பவமாம் பரிசறுப்பார் பார்"

How to resolve doubts in Saiva Siddhantham (சைவ சித்தாந்தம்) through  Scientific approach?

 

 Axioms and Aphorisms in Saiva Siddhantam have got clear proofs based on the established "Theory of Measure" ("அளவையியல்" in Tamil). Like any other branch of science, Saiva Siddhantham is based on truths using the well established doctrines(divine theories) and their proofs based on the "Theory of Measure" which includes inference, empirical testimony of the life experiences of the 63 nayanmars, 4 Samaya Acharyaas (சமயாசிரியர்கள் (அ) சைவகுரவர்கள்) and 4 Santhana  Acharyaas (சந்தானாசிரியர்கள் (அ) சந்தானகுரவர்கள்) through theirs 12 Saiva Thirumuraihal (Divine Poetry - சைவ இலக்கியங்கள் (அ) வழிபாட்டு நூல்கள்) and 14 Meikanda Sastras (Divine Grammar - சைவ இலக்கணங்கள் (அ ) நெறிப்படுத்தும் நூல்கள்). As per the established practice of framing the rules of Grammar for Poetry based on the study of prevailing eternal poetry, one has to bear it in mind that the theory of Saiva Siddhantam is framed based on the 12 Saiva Thirumuraihal (சைவஇலக்கியங்கள்). Therefore, whenever, one has got any doubt on the meaning and interpretation of any of the components of saiva siddhantham, he or she has to seek clarification or proof for the doubt only in the life testimonies of the saiva saints recorded through the 12 Saiva Thirumuraihal (சைவஇலக்கியங்கள்). Such proofs in Thirumurai verses have to be true and reliable as these Saints have realized The God through their meditation and love; they cannot be contrary to truth and hence any philosophical research with citations from such references are real research only.

Common Man's Questions on Philosophy of God and the Universe he belongs to:


Who am I? Is there a God? What are the nature of God, Soul and the cosmos? What is my relationship with God and the worldly things? What is the reason for happenings in life over which one has no control? Such questions often arise in any philosophical system.

Saiva Siddhantam gives fitting answers and explanations to them.

Characteristics of Lord Siva, The Supreme God:

-The Supreme Reality is called Siva.
-He is infinite consciousness.
-He is eternal, changeless, formless, independent, omnipresent, omnipotent, omniscient, one without a second, beginningless, causeless, taintless, self-existent, ever free, ever pure, and perfect.
-He is not limited by time.
-He is infinite bliss and infinite intelligence.
-He is free from defects, the all-doer, the all-knower.
 The Supreme God Siva has the eight attributes (எண்குணம்) of eight attributes of self-existence (தன்வயம்-thanvayam), essential purity (தூய்மை-thooimai), intuitive wisdom (இயற்கையறிவு-eyarkaiarivu), infinite intelligence(முற்றறிவு-murtarivu), freedom from all bonds(கட்டின்மை-kattinmai), infinite grace or love(பேரருள்-perarul), omnipotence(எல்லையிலா ஆற்றல்-ellaielaa Atral), and infinite bliss(வரம்பில் இன்பம்-varambil inbam). Siva is called Engunathaan - எண்குணத்தான் by the Siva Saints.

"Before His foot, 'the Eight-fold Excellence,' with unbent head,
Who stands, like palsied sense, is to all living functions dead." Thirukural:1-9.

The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation.

"கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் 
தாளை வணங்காத் தலை." - திருக்குறள்:1-9.
குறிக்கோளும் குணமும் இல்லாத பொறிகள் பயனற்றவை; எட்டுகுணங்களையுடைய இறைவன் தாளை வணங்காத தலை பயனற்றது.

Lord Siva is the God of Love. His grace is infinite. His love is infinite. He is the saviour and Guru. He is engaged in freeing the souls from the thraldom of matter. He assumes the form of a Guru out of His intense love for mankind. He wishes that all should know Him and attain the blissful Sivanantham or Siva-Padam (the state of Siva). He watches the activities of the individual souls, and helps them in their onward march. He liberates the individual souls from their fetters or bonds.


The Big Question the Mankind  poses is : Why Lord Siva, the Supreme God of Love, the Saviour and who assumes the form of a Guru out of His intense love for mankind and wishes that all should know Him and attain the blissful Sivanantham has chosen not to create life for all souls as equals? Some souls are given life with knowledge and wisdom, capability, good health and wealth, beautiful physique and long life while some other souls are born as poor, ignorant, live in poverty, devoid of health and shorter span of life. Is it just and fit His stature as the God of Love with infinite grace? 

The answer to the above question is : The God of Love with infinite grace has not created the nature of human life as per His will; such creations are made by Him only as per the wills of the Souls. That is, as per the karmas (deeds) of the souls, they are created thus; doing so reflects only His just acts and kindness towards souls rather than favouring or punishing some souls at the cost of some other souls.

One may ask, "Will any soul like to be born as poor, ignorant, live in poverty, devoid of health and live for a shorter span of life?". The straight answer is definitely a straight and big 'NO'. No soul would like to have such a life straight away; However, such souls do those acts (in their  births) which will lead them to be born in such poor conditions. The life on earth or very birth itself is with a lot of sufferings and sorrows; souls do think that there is some happiness to be born on Earth and they like to be born on earth to enjoy such happiness. Since happiness on earth varies in different ways, the types of births also varies in different ways.

One should understand that similar to his or her desire to have happiness but not sorrows, he or she should not do any act that is harmful to any other living being. If one soul harms another soul, it becomes the duty of The God to punish the harm inflicting soul as all souls are equals for Him. Therefore, as a punishment for such harmful acts only He gives a birth with poverty, ignorance, devoid of health and shorter span of life. However, God does not want to do all these; For several reasons like the one discussed above, He does so many acts starting with creation, only in accordance with the level of attainments of the souls which are not due to His Nature. Therefore, the question of doubt on the impartial Independent existence of Supreme God does not arise.

The logical explanations given above by Saiva Sidhantham gives us the strength to think and ‘rebuild’ our current faith and understanding about GOD. Its is therefore, necessary and useful to understand this great philosophy methodically following the principles of Scientific Methods. In Science, an axiom is a premise or starting point of reasoning. As classically conceived, an axiom is a premise so evident as to be accepted as true without controversy. Axioms define and delimit the realm of analysis. In other words, an axiom is a logical statement that is assumed to be true. Therefore, its truth is taken for granted within the particular domain of analysis, and serves as a starting point for deducing and inferring other (theory and domain dependent) truths. This series of articles will present the science of Saiva Siddhanta  with Axioms and Proofs in accordance with 14 Meikanda Sastras and 12 Thirumuraihal.

Axiom1: Existence of the great triple realities of Saiva Siddhantam:  GOD, SOUL and its BONDAGE (Pathi, Pasu, Pasam)  are Eternal Entities (that has neither beginning nor end-அநாதி ).

Explanation: The three entities Pati (God, இறை), Pasu(Soul, உயிர் (அ ) ஆன்மா ) and Pasam(Bonds, தளை) are eternal (anadhi (அ ) நிலைபேறுடைமை (அ ) முடிவின்மை). Pati(God) is the Lord of the Pasu(Souls). Pasam is the bondage. Pasu is under bondage. All things known and perceived are included in one of these three categories. (Detailed explanations will appear later)

Axiom2: Souls are infinite and have their own limitations. Its capabilities are limited due to the bondage or Pasam upon them. This is also eternal like God and souls. The soul is known as Pasu due to its nature of being under Pasam.

According to Saiva Siddhanta God is one, Souls are infinite and innumerable and Pasam consists of three impurities (malams) called Anava (anavam), Karma (kanmam) and Maya (mayai). Like Pati who is real and eternal, Pasu  and Pasam are also real and eternal. (Detailed explanations will appear later)

The bonds that bind the Souls (Anava, Karma, Maya): 


Souls (Pasu) are by nature infinite, all-pervading, eternal, and all-knowing like Lord Siva (Pati). Yet, souls think that they are finite, limited, little-knowing, ignorant, and temporary. This is due to the bonds (Pasa), viz., Anava, Karma, and Maya, which are called the three Malas (or impurities). Anava is the impurity which makes the all-pervading souls think itself to be atomic (Anu). It produces the erroneous notion of finiteness. The second impurity or bond is Kanma. The soul acts in certain ways on account of its limitation, and does good and evil actions. Kanma brings about the conjunction of the soul with its body. The results of the Kanma have to be worked out in the world. There should be worlds and bodies, in order to experience the fruits of actions and acquire knowledge. These are provided by Maya, the third Mala or bond. Maya is the material cause of the world. The soul gets experience and limited knowledge through Maya.

The soul learns, by long experience, that this worldly life or Samsara (cycle of birth and death) is full of pains and is transitory, and that he can attain eternal bliss and immortality only by attaining Sivanandha or Mukthi  (reaching the floral feet of Siva or God-realisation). Soul develops Vairagya (dispassion), and Viveka (discrimination between the Real and the unreal, the Permanent and the impermanent).

Discipline and grace culminate in Gnanam. Gnanam is the supreme means of salvation or the attainment of the final beatitude. Karma and other means are only subsidiary to it. They are auxiliaries.

The attainment of Muthi (or Siva-nature) does not mean complete merging of the soul in Siva. The liberated soul does not lose its individuality. It continues to exist as a soul in God. Sivatva is the realisation of an identity of essence in spite of difference. The soul attains the nature of Siva, but it is not itself Siva or God.



The way to the attainment of Muthi (God-realisation): one must free oneself from the three bonds (described above) to attain salvation.

Ruttiran is called the Destroyer, because he carries on the process of reproduction in all animals and plants, or is the one who sends souls into successive bodies. This involves the destruction of the old body; hence his appellation of Destroyer. But Transformer, or Reproducer, or Regenerator, would be a more correct
appellation. The work of reproduction necessarily involves the function of Brahma the Creator or Generator, and vishnu, the Preserver or Protector.

One has to have a clear understanding of the role of Brahma as the Creator or Generator (படைத்தல்). The act of 'Creation' is not about creating the souls. Souls are not created at some point of time; they are eternal (always present) as that of The God. For the enlightenment of the ever present souls the God (through Brahma) creates the world, bodies with senses and sensors, nature and the other materials required from the source material 'Maya' and connects the Souls with various bodies; this process is called 'Creation' or 'படைத்தல்'.

In order to enable Souls to experience the effect of their prarartha karmas with such bodies and other belongings they are sustained by God for a specific period; this is called 'காத்தல்' or Preservation or Protection.

On completion of the Souls respective destined mission periods of experiencing and exhausting their prarartha karmas, the God disconnects the Souls from their bodies and other ancillaory entities asssociated with such bodies and makes them dissolve into 'Maya'; this is called Dissolution or 'ஒடுக்குதல்' or 'அழித்தல்'.

Through various anta-karanangal of Maya including the five senses and sensors, the Souls are sensing to acquire a little knowledge about the world and themselves; unfortunately, such senses bind the Souls with the enjoyment of the worldly materials and such bondages make the souls to crave more and more for such worldly enjoyments; this prevents the souls from realizing the Grace(arul) of the God and make them to forget the God. In such state, the Souls tend to be world bound ignoring the God and His Grace. This is called 'Maraithal' 'மறைத்தல்'.

The cycle of birth and death due to the 'Maraithal' sakthi leads to the weakening of Anava Mala and its effect on the Souls. In such state, the Soul tend to shed the world and look forward to seek the Grace of God. The God endows his Grace on such Souls.
When the Soul, finally set free from the influence of threefold defilement through the grace of Sivan, obtains divine wisdom, and so rises to live eternally in the conscious, full enjoyment of Sivan's presence, in conclusive bliss, this is EMANCIPATION or Mukthi. This is called 'அருளல்'.
(Some more additions will be done in this article)

References

1. தருமையாதீனப் புலவர், சித்தாந்தக்கலைமணி, மகாவித்துவான் சி.அருணைவடிவேல் முதலியார், "சித்தாந்தத் தெளிவியல்", வெளியீடு எண் 589, தருமை ஆதீனம், 1968.
2.  Rev. H. R. Hoisington, "Tattuva-Kattalei"
3. Maraimalai Adikal, "Maya"
4. Gordon Matthews, "Expository Notes on Bhodam"
5. Gordon Matthews, "SivaGnana Bhodam - A Manual of Saiva Religious Doctrine"
6. K Vajravelu Mudaliar, "The Vedas and Saiva Siddhanta"
7. S.Sambasivanar, "Thiruvasagathil Saiva Siddhantham"