Thursday, 26 January 2017

வான்கலந்த மாணிக்கவாசகம் 14: கல்வியும் செல்வமும் கடந்த இறைவன்

வான்கலந்த மாணிக்கவாசகம் 14: கல்வியும் செல்வமும் கடந்த இறைவன்: மணிவாசரின் இறையனுபவப் பகிர்வில், ‘கடைமுறை என்னையும் இருப்பது ஆக்கினன்’ என்ற சொற்கள் மிகமிக முக்கியமானவை;

Thursday, 19 January 2017

வான்கலந்த மாணிக்கவாசகம் 13: அறிய முயன்றால் அடங்கும்

வான்கலந்த மாணிக்கவாசகம் 13: அறிய முயன்றால் அடங்கும்: 'மனம்: அடக்க நினைத்தால் அலையும், அறிய முயன்றால் அடங்கும்' என்பது தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் அருள்வாக்கு.

Saturday, 14 January 2017

வான்கலந்த மாணிக்கவாசகம் 12: அற்புதன் காண்க, அநேகன் காண்க

வான்கலந்த மாணிக்கவாசகம் 12: அற்புதன் காண்க, அநேகன் காண்க: நேர்முக வர்ணனையாக இறைவனின் திருக்காட்சியை நமக்கெல்லாம் திருவாசகங்களால் காட்சிப்படுத்தும் அழகைக் காண்போம்.

Saturday, 7 January 2017

வான்கலந்த மாணிக்கவாசகம் 11: நுண்மையிலும் நுண்ணியன்

வான்கலந்த மாணிக்கவாசகம் 10: நுண்மையிலும் நுண்ணியன்: பெரிதினும் பெரிதான இறைவனைத் தரிசித்த நாம், நுண்மையிலும் நுண்ணியனாக (nano of all other nanos) உள்ள இறைவனின் தரிசனத்தைக் காண்போம்.

Sunday, 1 January 2017

வான்கலந்த மாணிக்கவாசகம் 10: இறைவனே குருவாக அருளிய பெரும்பேறு

வான்கலந்த மாணிக்கவாசகம் 10: இறைவனே குருவாக அருளிய பெரும்பேறு: குளியலறையில் இருந்தால், படுக்கையறையைப் பார்க்க முடியாத ‘நான்’ என்னும் உணர்வுடைய உடலில் வாழும் உயிருக்குப் புலனாகாதவன் இறைவன்.

வான்கலந்த மாணிக்கவாசகம் 09: இறைவன் எப்போது உயிரில் கலந்து உறவானான்

வான்கலந்த மாணிக்கவாசகம் 09: இறைவன் எப்போது உயிரில் கலந்து உறவானான்: இறைவன் எப்போது உயிரில் கலந்து உறவானான் என்பதை மணிவாசகர் தில்லையில் அருளிய கண்டபத்துப் பதிகத்தில் அற்புதமாக விளக்குகிறார்.

Monday, 19 December 2016

வான்கலந்த மாணிக்கவாசகம் 08: மண்புகுந்து மனிதரை ஆட்கொண்டான்

வான்கலந்த மாணிக்கவாசகம் 

08: மண்புகுந்து மனிதரை ஆட்கொண்டான்

பேராசிரியர் ந. கிருஷ்ணன்

வாழ்வில் ஒருவருக்கு எது எப்போது நடைபெறும் என்பது முன்பே விதிக்கப்பட்டுவிட்டது என்றால் மனித முயற்சியும், உழைப்பும் எதற்கு, இறை வழிபாடுகூட எதற்கு என்ற கேள்விக்கு விடைகாணும் திருவாசகத் தேனை இப்போது காண்போம்.
விதியை வெல்ல மனிதனுக்குச் சுதந்திரம்
ஒருவருக்கு மிக மோசமான சூழலில் பிறப்பு அமைவது அவர் முன் செய்த வினைப்பயன். தன் பெற்றோரை, தன் பிறவிச் சூழலைத் தேர்ந்தெடுக்கும் உரிமையின்மை, மனிதருக்குச் சுதந்திரம் இல்லாததை உறுதிப்படுத்துகின்றன. ஆனால், பிறந்த பின் செயலாற்றுவதற்கு உயிர்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு என்கின்றன நம் திருமுறைகள். விளையாட்டுத் துறையில் உயர்ந்த வாய்ப்புக் கிடைத்த ஒருவர் சிறப்பாக உழைத்து ‘பாரத் ரத்னா’ வாங்கும் நிலைக்கு உயர்வதோ அல்லது முறையற்ற வழியில் கிடைக்கும் பெரும்பொருளுக்கு ஆசைப்பட்டு, சூதாடி சிறை செல்வதோ அவரின் சுதந்திரம்.