Wednesday, 5 July 2017

வான்கலந்த மாணிக்கவாசகம் 36: ஓருருவாய நின் திருவருள்

வான்கலந்த மாணிக்கவாசகம் 36: ஓருருவாய நின் திருவருள்:

அன்பர்களே, இன்றைய இந்து நாளிதழில் வந்த என்னுடைய திருவாசகக் கட்டுரையில், இடப் பற்றாக்குறை காரணமாக, ஒரு முக்கியமான திருவாசகம் இடம் பெறவில்லை. "நெல்லைக் கொடுத்துப் பதரை வாங்கிய பித்தன்" என்னும் பகுதியில் கொடுக்கப்பட்ட விளக்கத்துக்கு உரிய கீழ்க்கண்ட அற்புதமான திருவாசகத்தையும்  இப்போது சேர்த்து சுவையுங்கள்.



 தந்தது, உன் தன்னை; கொண்டது, என் தன்னை;சங்கரா! ஆர் கொலோ, சதுரர்?

அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்; யாது நீ பெற்றது ஒன்று, என்பால்?

சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்! திருப்பெருந்துறை உறை சிவனே!

எந்தையே! ஈசா! உடல் இடம் கொண்டாய்; யான் இதற்கு இலன், ஓர் கைம்மாறே! (திருவாசகம்:22.10)

No comments:

Post a Comment